டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா மற்றும் பலர் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படம் நவம்பர் 24ம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நேற்று வரையிலும் படத்தின் வெளியீடு பற்றிய போஸ்டர்களையும், பதிவுகளையும் பதிவிட்டு வந்தது. ஆனால், இன்று எந்தப் பதிவையும் போடவில்லை. முன்பதிவும் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், நாளை படம் வெளியீடு இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
கவுதம் மேனன் தயாரித்த 'நரகாசூரன்' படத்திலிருந்து அவருக்கு பெரும் நிதிச் சிக்கல்கள் உருவாக ஆரம்பித்தது. அதன்பிறகு அவர் இயக்கிய, தயாரித்த படங்கள் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கி, பின் வெளிவருவது வாடிக்கையாக இருந்தது.
இப்போது 'துருவ நட்சத்திரம்' படமும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டது. விக்ரம் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த இந்தப் படம் தள்ளிப் போனதால் நாளை வெளியாக உள்ள மற்ற படங்களுக்குக் கூடுதலாகத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.




