பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
செல்வின் ராஜ் இயக்கத்தில் 'கான்ஜூரிங் கண்ணப்பன்' என்கிற ஹாரர் காமெடி படத்தில் சதீஷ்,ரெஜினா ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், விடிவி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இத்திரைப்படம் அடுத்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வரும் என இந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.