ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை |
ஜெயிலர் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கும் தனது 170வது படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171-வது படத்தில் நடிக்கப் போகிறார். அதோடு ஜெயிலர் படத்தை அடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ரஜினி. முன்னதாக ரஜினியின் பேரன்களான யாத்ரா, லிங்கா இருவரும் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.