பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' |
வருகிற 10ம் தேதி வெளியாக இருக்கும் தனது 'ஜப்பான்' படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கார்த்தி. பட புரமோசனுக்காக துபாய் சென்ற கார்த்தி அங்கு புர்ஜ் கலிபாவை பார்வையிட்டார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியும் துபாயில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருக்கும் முகாம் பற்றி கார்த்தியிடம் கூறினார்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளர் முகாம்களில் தங்கியுள்ள பணியாளர்களின் பிரச்னைகள் அறிந்த கார்த்தி அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் அவர்களுடன் தீபாவளியை கொண்டாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முகாமிற்கு சென்ற கார்த்தி இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தார். அவர்களிடையே பேசிய கார்த்தி, “குடும்பத்துக்காக வலிகளை சுமக்கும் நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள். நான் நிழல் ஹீரோதான். துபாயில் இப்படியும் கஷ்டப்படும் தொழிலாளர்களை இப்போதுதான் பார்க்கிறேன். ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக ஜப்பான் கதாபாத்திரம் இருக்கும்” என்றார்.
இந்தியாவில் இருந்து தங்களை பார்க்க வந்த முதல் நடிகர் நீங்கள் தான் என அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். பொதுவாகவே நடிகர்கள் தங்களது படங்களை துபாயில் உள்ள ஷாப்பிங் மால்கள் அல்லது நட்சத்திர ஹோட்டல்களில் விளம்பரம் செய்வார்களே தவிர துபாயில் இதுபோன்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களை சந்தித்ததே இல்லை. நடிகர் கார்த்தியின் இந்த பெருந்தன்மையால் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து காணப்பட்டதுடன் ஒரு சினிமா நட்சத்திரத்தை இவ்வளவு அருகில் நெருக்கமாக பார்த்தது குறித்து தங்களது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.