சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் |

முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போகிறார்கள் என்றும் குடும்ப நிகழ்வுகளில் கூட அவர்கள் இணைந்து பங்கேற்பது இல்லை என்பது போன்று செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அதன் பிறகு சோசியல் மீடியாவில் தாங்கள் ஒன்றாக இருப்பது போல ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அந்த சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ராய் தரப்பில் முற்றுப்புள்ளி வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்த கொண்டாட்ட நிகழ்வில் ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளதுடன் சுற்றுலா பயணமாக வெளியே கிளம்பி சென்று விட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷயமும் வழக்கம் போல அமிதாப்பச்சன் குடும்பத்திற்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே இப்போதும் கருத்து வேறுபாடு தொடர்கிறது என்கிற பரபரப்பை மீண்டும் துவங்கி வைத்து உள்ளது.