காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. அரை குறை ஆபாச ஆடையுடன் அவர் இருப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதைப் பார்த்த பலரும் ஷாக் ஆகினர். பிரபலங்களின் முகங்களை மட்டும் எடுத்து 'மாஸ்க்' செய்து இப்படி புகைப்படங்கள், வீடியோக்கள் பரவி வருவது சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது.
இதனால் மனதளவில் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சிலர் இப்படியான அவதூறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.
ராஷ்மிகாவின் அந்த வீடியோ குறித்து பாலிவுட்டின் சீனியர் நடிகரான அமிதாப்பச்சன், “இது சட்டப்படியான வலுவான வழக்கு,” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்து ராஷ்மிகா இதுவரையிலும் எந்த ஒரு பதிவும் பதிவிடவில்லை.