ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்திருந்த பகவந்த் கேசரி என்ற படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வந்த நிலையில், அடுத்து கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் -2 படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் சத்தியபாமா என்ற ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடிக்கும் இந்த படத்தை சுமன் சிக்கலா என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதன் டீசர் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போலீஸ் உடையில் காஜல் அகர்வால் கம்பீரமாக தோன்றும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் தவிர உமா என்ற ஒரு ஹிந்தி படத்திலும் அவர் கதையின் நாயகியாக தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.