‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

“எப்படியிருந்த தமிழ் சினிமா இப்படி ஆகிவிட்டது,” என சில பல வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களை 'ரீ-வைன்ட்' செய்து பார்க்கும் போது தோன்றுகிறது. 1989ம் ஆண்டு தீபாவளி தினமான அக்டோபர் 28ம் தேதியன்று வெளியான படங்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.
மூன்று ஹீரோக்களுக்கு இரண்டு
அன்றைய தினத்தில் ராமராஜன் கதாநாயகனாக நடித்த “அன்புக் கட்டளை, தங்கமான ராசா” ஆகிய இரண்டு படங்களும், சத்யராஜ் நடித்த “திராவிடன், வாத்தியார் வீட்டுப் பிள்ளை” ஆகிய இரண்டு படங்களும், விஜயகாந்த் நடித்த, “ராஜ நடை, தர்மம் வெல்லும்,” ஆகிய இரண்டு படங்களும் வெளியாகின. ஒரே நடிகரின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதும், அடுத்தடுத்த வாரங்களில் வெளியாவதும் அப்போதெல்லாம் சர்வ சாதாரணம். பின்னர்தான் அதற்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

175 நாள் கொண்டாட்டம்
அதேதினத்தில் ரஜினிகாந்த் நடித்த 'மாப்பிள்ளை', கமல்ஹாசன், பிரபு நடித்த 'வெற்றி விழா', பாலசந்தர் இயக்கிய 'புதுப் புது அர்த்தங்கள்” ஆகிய முக்கிய படங்களும் வெளியாகின. இந்த மூன்று படங்களுமே 175 நாட்களைக் கடந்து ஓடியது குறிப்பிடத்தக்கது.
'வெற்றி விழா' படம் ராபர்ட் லுட்லம் எபதிய 'த போர்ன் ஐடின்டிட்டி” ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் இந்தப் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இளையராஜாவின் இசையில் 'மாருகோ மாருகோ மாருகயி' பாடலுக்கு அப்படி ஒரு வரவேற்பு கிடைத்தது.
ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'மாப்பிள்ளை' படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வெளிவந்த 'அத்தகு யமுடு அம்மாயிக்கி மொகுடு' படத்தின் தமிழ் ரீமேக். தமிழில் சிரஞ்சீவியே தயாரித்து ஒரு சண்டைக் காட்சியிலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இளையராஜான் இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை. 200 நாட்களைக் கடந்து ஓடிய படம் இது.

பாலசந்தர் இயக்கத்தில் ரகுமான், கீதா, சித்தாரா நடித்து வெளிவந்த படம் 'புதுப்புது அர்த்தங்கள்”. இளையராஜாவின் அனைத்துப் பாடல்களும் ஒரு மாறுபட்ட கதையும் இந்தப் படத்தை வெள்ளிவிழா காண வைத்தது.
7 படங்கள் 100 நாள் வெள்ளிவிழா
“மாப்பிள்ளை, வெற்றி விழா, புதுப்புது அர்த்தங்கள்” படங்கள் மட்டுமல்ல “வாத்தியார் வீட்டுப் பிள்ளை, ராஜநடை, அன்புக்கட்டளை, தங்கமான ராசா” ஆகிய படங்களும் 100 நாட்களைக் கடந்த படங்கள்.
இளையராஜா - தி கிங்
மற்றொரு முக்கியமான விஷயம் அந்த தீபாவளி வெளியீடுகளில் இருக்கிறது. அன்றைய தினம் வெளிவந்த 9 படங்களில் 7 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. அந்த 7 படங்களில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிட வேண்டியவை. இந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு இசையமைத்துவிட்டு யு டியூபில் 100 மில்லியன் எனக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் யு டியூப் எல்லாம் வந்திருந்தால் அந்த 7 படங்களின் பல பாடல்கள் 100 மில்லியனைக் கடந்திருக்கும்.

1989 தீபாவளி நாளில் அப்போதைய டாப் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ராமராஜன், மோகன், ஆகியோரது படங்கள் வெளியாகி அவை அனைத்துமே லாபத்தைக் கொடுத்தது. இந்தக் காலத்தில் ஒரே ஒரு படத்தை அனைத்துத் தியேட்டர்களிலும் ஆக்கிரமித்துக் கொண்டு 500 கோடி வசூல் என அலறிக் கொண்டிருக்கிறார்கள்.




