லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2023ம் ஆண்டின் மிகப் பெரும் வசூல் படமாக ரஜினிகாந்த் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான 'ஜெயிலர்' படம் அமைந்தது. அப்படத்தின் மொத்த வசூல் 600 கோடி என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனம் ஆகஸ்ட் 25ம் தேதி படத்தின் வசூல் 525 + கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதன்பின் கடைசி நாள் வசூலையும் சேர்த்து மொத்த வசூல் எவ்வளவு என்பது குறித்து அறிவிக்கவில்லை.
இதனிடையே, விஜய் நடித்து கடந்த வாரம் வெளியான 'லியோ' படத்தின் வசூல் 400 கோடி என 'காம்ஸ்கோர்' இணையதளம் செய்தியை வெளியிட்டது. ஆனால், அது பொய்யான வசூல் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 'லியோ ஸ்கேம்' என்று கூட எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் இருந்து வருகிறது. அந்த 400 கோடி வசூல் என்பதே ஒரு ஊழல் தான் என்பதுதான் அந்த டிரெண்டிங்கின் சாராம்சம்.
இதனிடையே, 'ஜெயிலர்' படத்தின் வசூலை 'லியோ' முறியடித்துவிடும் என விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். இன்று வரை விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் சிறப்பாகவே இருக்கிறது. நாளை முதல் வசூலில் மிகப் பெரும் சரிவு ஏற்படலாம். அதனால், இன்றைக்கோ நாளைக்கோ 'லியோ' படத்தின் வசூல் இத்தனை கோடி என தயாரிப்பு நிறுவனம் தரப்பிலோ, அல்லது அவர்கள் சார்பிலோ வசூல் விவரம் வெளியாகலாம்.