த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
நடிகர் யோகி பாபு தற்போது காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இனிமேல் வருடம் ஒரு படத்தில் கதையின் நாயகனாகவும், மீதமுள்ள படங்களில் எல்லாம் காமெடியனாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு யோகி பாபுவுக்கு பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில், 2021 ஆம் ஆண்டு அவர்களுக்கு விசாகன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பரணி கார்த்திகா என்று பெயர் வைத்தார் யோகி பாபு.
இந்த நிலையில் யோகி பாபுவின் மகள் பரணி கார்த்திகாவின் முதல் பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, உதயநிதி, விஜய் வசந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு யோகி பாபுவின் மகள் பரணி கார்த்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.