பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமா உலகின் முக்கிய இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். அவரது இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் கேரளாவில் மிகப் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் எதையும் படக்குழு செய்யவில்லை. எந்த ஒரு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ நடத்தவேயில்லை. லோகேஷ் கனகராஜ் மட்டும் சில பேட்டிகளைக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கேரளா விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக கேரளாவில் 'லியோ' வெளியாகியுள்ள தியேட்டர்களுக்கு லோகேஷ் 'விசிட்' அடித்தார்.
பாலக்காட்டில் கூடிய திரளான விஜய் ரசிகர்கள் லோகேஷை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம். “கேரளா, உங்களது அன்புக்கு நன்றி. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. கூட்டத்தில் சிறு காயம் ஏற்பட்டதால் மற்ற இரண்டு இடங்களுக்கும் போக முடியவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த முடியவில்லை. உங்களை மீண்டும் வந்து சந்திப்பேன். அதுவரை 'லியோ' படத்தைப் பார்த்து மகிழுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.