லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சினிமாவில் நடிகராக மாறியவர் கோவிந்த் பத்மசூர்யா. 2016ல் தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கீ என்கிற படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த அல வைகுந்தபுரம்லோ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவரை போலவே சின்னத்திரையிலும் சினிமாவிலும் வளர்ந்து வரும் கோபிகா அனில் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் கோவிந்த் பத்மசூர்யா. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிய முறையில் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.