மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமா வரலாற்றில் இதற்கு முன்பு ஒரே ஆண்டில் இப்படி ஒரு வசூல் நடந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அந்த அளவிற்கு இந்த ஆண்டில் வெளிவந்த சில தமிழ்ப் படங்கள் பெரிய வசூலைக் குவித்து சாதனை புரிந்துள்ளன.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கலுக்கு வெளிவந்த 'வாரிசு' படம் ரூ.300 கோடியும், 'துணிவு' படம் ரூ.200 கோடியும் வசூலித்தன.
அதன்பின் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 2' படம் ரூ.500 கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக மட்டுமே வசூலித்து 200 கோடி வரை ஏமாற்றத்தைத் தந்தது.
அதற்கடுத்து ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படம் மொத்தமாக ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. தற்போது விஜய்யின் 'லியோ' படம் ரூ.400 கோடி வசூலைக் கடந்துள்ளதாம்.
தனுஷ் நடித்து வெளிவந்த 'வாத்தி', விஷால் நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்கள் இந்த ஆண்டில் தலா ரூ.100 கோடி வசூலைக் கடந்த படங்கள்.
50 கோடி வசூலைக் கடந்த படங்களாக உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' ரூ.70 கோடியும், சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' ரூ.80 கோடியும் வசூலித்துள்ளன. இந்த 9 படங்கள் மூலம் மட்டுமே சுமார் ரூ.2050 கோடி வசூல் வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரையில் இல்லாத அளவிலான ஒரு வசூல் தொகை இது. இருப்பினும் ஒரே ஒரு படம் ரூ.1000 கோடி வசூலைக் கடப்பது எப்போது என்ற ஏக்கம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் இருக்கிறது. தெலுங்கு, கன்னடத்தில் அந்த சாதனையைப் புரிந்துவிட்டார்கள். 2024ம் வருடத்தில் அது நடந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.