‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
குலேபகவாலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. இதில் கதாநாயகியாக பூவே உனக்காக சீரியலில் நடித்த ராதிகா பிரீத்தி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கி விரைவாக முடிந்தது. முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் இந்த படத்தை எடுத்துள்ளனர். தற்போது இந்த படத்தை பற்றிய அறிமுக முன்னோட்ட வீடியோவை ஒன்று வெளியிட்டுள்ளனர்.
அதில், இந்த திரைப்படம் 80ஸ் காலக்கட்டத்தில் எடுக்கப்பட்டது என மொட்டை ராஜேந்திரன் பின்னணி குரல் கொடுக்க, சந்தானம், ராதிகா பிரீத்தி இருவரும் மாப்பிள்ளை - பெண்ணாக காட்சி அளிக்கின்றனர். போட்டோ எடுக்க இருவரையும் சிரிக்க சொல்ல சந்தானம் நன்றாக சிரிக்க, ராதிகாவை சிரிக்க சொல்லி சந்தானம் மிரட்டுவது போன்று வீடியோ வெளியிட்டுள்ளனர்.
வீடியோவின் முடிவில், ‛‛பேன்ட் பாக்கெட்டில் செல்போன், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள ஜிங் சான் கார்ட்டூன் கதாபாத்திரம், டிவியில் ஒட்டப்பட்டுள்ள நயன்தாராவின் போட்டோ...'' ஆகியவற்றை சுட்டிக்காட்டி இவுங்களா 80ஸ் கிட்ஸ் என ரெடின் கிங்ஸ்லியின் குரல் ஒலிக்கிறது. படத்தின் தலைப்பு போன்ற ஒரே பில்டப்பாக இருக்கிறது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
முன்னதாக படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த வீடியோவை வெளியிடும் முன்பாக வெறும் கமல் பட வசனங்களை பதிவிட்டு பில்டப் கொடுத்து வந்தனர்.