இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கிறார் . ‛லியோ' படம் வெளியாகும் முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. ஆனால் லியோ வெளியான பிறகு தான் இந்த படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்தது.  லியோ படம் வெளியான 5 நாட்களுக்கு பின் இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இன்று(அக்., 24) வெளியிட்டனர்.
படத்தின் பூஜை வீடியோ உடன் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விபரமும் தெரியவந்துள்ளது. அவர்கள் யார் என்பது ஏற்கனவே வெளியான தகவல்கள் தான் என்றாலும் தற்போது அது உறுதியாகி உள்ளது. 
அந்தவகையில் இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர முக்கிய வேடங்களில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என மல்டி ஸ்டார்களும், அஜ்மல், ஜெயராம், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ் மற்றும் வெங்கட்பிரபு கேங்கான பிரேம்ஜி அமரன், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். 
மேலும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, கேமராமேனாக சித்தார்த், எடிட்டராக வெங்கட் ராஜீன், ஸ்டன்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணியாற்றுவதாக அந்த வீடியோவில் வெளியிட்டுள்ளனர். 
சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது தென் ஆப்ரிக்காவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏகப்பட்ட கலைஞர்கள் நடிப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 
 
           
             
           
             
           
             
           
            