பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? |

நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து தயாரித்த திரைப்படம் 'கூழாங்கல்'. இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் செல்லப்பாண்டி, கருத்தடையான் என பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் இந்தப் படம் சில சர்வதேசப் பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றது. ரோட்டர்டாம் விழாவில் விருது வென்ற முதல் தமிழ்ப்படம் என்கிற அங்கீகாரம் பெற்றது. கடந்த 2021-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்காக இந்தியா சார்பில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடங்களாக இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இப்போது இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகின்ற 27ந் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.