ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை(அக்., 19) 5 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகிறது. இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு படக்குழுவினர் தமிழக அரசை நாடியது. ஆனால் அரசு மறுத்துவிட்டது. 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 5 காட்சிகள் நடத்திக் கொள்ளலாம். ஆனால் காலை காட்சி 9 மணிக்கு தான் ஆரம்பிக்கணும் என அறிவித்தது.
ஆனால், தயாரிப்பு தரப்போ விடாப்பிடியாக லியோவிற்கு எப்படியாவது காலை காட்சி பெற்று விட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது காலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. வேண்டுமானால் 9 மணி காட்சியை 7 மணிக்கு துவங்கலாம். ஆனால் அதையும் அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு லியோ தரப்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இன்று அரசு சார்பில் உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்ட உத்தரவில், 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அரசாணை வெளியிட்டபடி 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.