ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'லியோ'. இப்படத்தை முன்னாள் தயாரிப்பாளர், நடிகர் இந்நாள் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு பார்த்திருக்கிறார்.
படம் பார்த்த பின் எக்ஸ் தளத்தில், “தளபதி விஜய் அண்ணா லியோ... டைரக்டர் லோகேஷ் எக்சலண்ட் பிலிம் மேக்கிங், அனிருத் இசை, அன்பறிவு மாஸ்டர்… எல்சியு… ஆல் த பெஸ்ட் டீம்”, எனப் பதிவிட்டுள்ளார்.
இன்று விடியற்காலை அவர் பதிவிட்டுள்ள இந்த டுவீட் அதற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. பல விஜய் ரசிகர்கள் அதற்கு லைக்கும், கமெண்ட்டும் போட்டு வருகிறார்கள்.
'லியோ' படத்திற்கான அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்குவதில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என விஜய் ரசிகர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஒரே ஒரு டுவீட்டில் அதை அனைத்தையும் சரி செய்துவிட்டார் உதயநிதி.
'எல்சியு' பக்கத்தில் கண்ணடிக்கும் எமோஜியை அவர் போட்டுள்ளதால் நிச்சயம் அது இருக்கும் என ரசிகர்களின் கேள்விக்கு உதயநிதி பதிலளித்தது போல உள்ளது.