2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.
அதே போல, அதே படத்திற்காக சிறந்த பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பெற்றார். அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீபிரசாத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் தற்போது வசிக்க, தேவிஸ்ரீபிரசாத் சென்னையில்தான் இன்னமும் வசித்து வருகிறார்.

நேற்று தேசிய விருது பெற்ற பிறகு தேவிஸ்ரீபிரசாத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன், “எனது பால்ய நண்பர், எனது இசையமைப்பாளர், எனது நலம் விரும்பி, எனது உற்சாகத் தலைவருடன் சேர்ந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. முதல் முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பெற்றது மிக்க மகிழ்ச்சி. சென்னை சாலைகளிலிருந்து, டில்லி அரங்கு வரை… இது ஒரு 25 வருடப் பயணம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.