ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. வருகிற 19ம் தேதி இப்படம் உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க என்று கூறியிருக்கிறார். அதோடு, பல ஆயிரம் பேர் இதற்காக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் தொடங்குவதற்கு முன்பு எப்படியாவது தியேட்டருக்குள் சென்று அமர்ந்து விடுங்கள் என்று அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக லியோ படத்தின் முதல் 10 நிமிடத்தில் ஏதோ ஒரு முக்கிய சம்பவம் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் காரணமாகவே இப்படி தங்களை அலர்ட் பண்ணி உள்ளார் என்று கருதும் விஜய் ரசிகர்கள், நீங்கள் சொன்னது போலவே படம் தொடங்குவதற்கு முன்கூட்டியே நாங்கள் தியேட்டருக்குள் சென்று அமர்ந்து விடுவோம் என்று சோசியல் மீடியாவில் அவருக்கு பதில் கொடுத்து வருகிறார்கள்.