வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் டொவினோ தாமஸ். குறிப்பாக வித்தியாசமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் அந்த கதாபாத்திரங்களுக்காக தன்னை மாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயங்காதவர். குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகர் பிரித்விராஜுக்கு அடுத்ததாக இப்படி எடையை கூட்டி குறைத்து, தோற்றத்தில் மாற்றம் கொண்டு வருவதில் டொவினோ தாமஸ் ரசிகர்களை எப்போதும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது அதிரிஷ்ய ஜலகங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ். விருது படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற டாக்டர் பைஜு இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒரு தோற்றத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் டொவினோ தாமஸ்.
தற்போது இப்படத்தில் அவரது கதாபாத்திர தோற்றம் குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உண்மையிலேயே இது டொவினோ தாமஸ் தானா என பார்ப்பவர்கள் அனைவருமே சந்தேகப்படும் அளவிற்கு புதிய தோற்றத்தில் காட்சியளிக்கிறார் டொவினோ தாமஸ்.




