அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் வெற்றியை பெற்று கிட்டத்தட்ட 70 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மம்முட்டி அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் 'காதல் - தி கோர்'. இந்த படத்தின் டைட்டில் காதல் என்று இருந்தாலும் இதில் மம்முட்டி ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்துள்ளார் ஜோதிகா. மம்முட்டியுடன் இவர் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை. அது மட்டுமல்ல பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் ஜோதிகா நடித்துள்ளார். ‛தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டாலும் ரிலீஸ் தேதி குறித்து விவரம் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.