இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகை திவ்ய பிரபா. 'லோக்பால்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதன்பிறகு மும்பை போலீஸ், சிம், பையா பையா, நான்சென்ஸ், நிழல், மாலிக், அரியிப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கயல், கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் விமான பயணம் மேற்கொண்டபோது பாலியல் சீண்டலுக்கு உள்ளாகி உள்ளார். இதுகுறித்து அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது : சமீபத்தில் மும்பையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் சென்றேன். விமானத்தில் இருந்த சக பயணி ஒருவர் குடிபோதையில் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுதொடர்பாக அங்குள்ள விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தபோது அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் நான் தொடர்ந்து புகார் செய்து கொண்டே இருந்ததால், எனது இருக்கையை மட்டும் மாற்றிவிட்டு சென்றனர். கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன்.
இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. என்று எழுதியுள்ளார்.