அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி'. தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். முதன் முறையாக கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் 2 பாகங்களாக வெளிவர இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜயசாந்தி மூவீஸ் சுமார் ரூ.600 கோடியில் படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி இத்தாலியில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காகப் படக்குழு தனி விமானத்தில் இத்தாலி பறந்துள்ளது. நடன கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் சென்றுள்ளனர். பாடலை டிஜோரிச் ஸ்டோலிகோவிக் என்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் படமாக்குகிறார். சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். இந்த பாடலுக்கு மட்டும் 50 கோடி செலவிடப்படுவதாக கூறப்படுகிறது.