ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் நடித்துள்ள லியோ படம் வருகிற 19ம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புரமோசன்கள் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலும் தற்போது லியோ படத்தின் புரமோசன்களை தொடங்கி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் அக்டோபர் மாதம் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை லியோ படத்தின் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பேருந்துகளில் லியோ படத்தின் விஜய் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ள அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படி இங்கிலாந்து மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் லியோ படத்திற்கான புரமோசன்களை பெரிய அளவில் தற்போது தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் லண்டன் பேருந்தில் லியோ விஜய் இடம் பெற்றுள்ள வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.