டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்துள்ள கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா ஹிந்தியிலும் நடித்து வருகிறார். தெலுங்குப் பட இயக்குனரான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் படம் 'அனிமல்'. இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள அப்பாடலுக்கான போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில் ரன்பீர், ராஷ்மிகா இருவரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ராஷ்மிகா இப்படி முத்தக் காட்சியில் நடித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட போஸ்டர்கள் வெளியாவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். யு டியூப், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கும், புகைப்படங்களுக்கும் தணிக்கை அவசியம் என்று நீண்ட நாட்களாகப் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.




