லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததில் இருந்து விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றதுடன் தொடர்ந்து காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினர்.ஆனால் தாங்கள் இருவரும் நட்பாக மட்டுமே பழகி வருகிறோம் என தொடர்ந்து இருவரும் கூறி வந்தாலும் சில நிகழ்வுகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வது இந்த செய்திகளுக்கு இன்னும் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்தது.
இன்னொரு பக்கம் இவர்கள் இருவருமே அடிக்கடி தனித்தனியாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாகத்தான் வெளிநாட்டு சுற்றுலாவில் பொழுதுபோக்குகிறார்களோ என்று யோசிக்க வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே இரண்டு முறை இது போன்று புகைப்படங்கள் வெளியிட்டு யூகங்களை அதிகப்படுத்திய ராஷ்மிகா தற்போது லேட்டஸ்டாக துருக்கியில் ஒரு காபி ஷாப்பில் தான் அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் விஜய் தேவரகொண்டாவும் இதே காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இருவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் ஒவ்வொருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிட்டு வருகிறார்களோ என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.