ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வருகிற 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் விஜய் ஒரு ஆபாச வார்த்தை பேசி இருந்ததால் அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன. அதோடு, யுடியூபில் லியோ டிரைலர் வெளியிடப்பட்டதால் அது சென்சார் செய்யப்படவில்லை. ஆனால் அப்படி சென்சார் செய்யப்படாத இந்த டிரைலரை சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல திரையரங்கங்களிலும் வெளியிட்டார்கள். சென்சார் செய்யப்படாத ஒரு படத்தின் டிரைலரை திரையரங்கங்களில் வெளியிடக் கூடாது என்ற விதி உள்ளது. அதனால் அந்த விதிகளை மீறி லியோ டிரைலரை வெளியிட்ட அனைத்து திரையரங்கங்களுக்கும் விளக்கம் கேட்டு தற்போது சென்சார் போர்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.