மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை : படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், காவிரி தண்ணீர் பிரச்னை தொடர்பான கேள்வி எழுந்தபோது பதிலளிக்காமல் நழுவி சென்றார்.
தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையே காவிரி தொடர்பான பிரச்னை பல காலமாக நீடித்து வருகிறது. சமீபத்தில் இந்த பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அங்குள்ள கன்னட அமைப்பினர், கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றிக்கு பின் நடிகர் ரஜினி அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170 படத்தில் நடிக்க போகிறார். இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதன் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛ஜெயிலர் படம் எதிர்பார்த்த வெற்றியை விட மேலயே வந்துள்ளது. இப்போது 170வது படத்திற்காக செல்கிறேன். சமூக கருத்து கொண்ட படமாக பிரமாண்டமாய் 170 படம் உருவாகிறது. இதன்பிறகு 171 படம் தொடங்கும்'' என்றார் ரஜினி.
தொடர்ந்து அவரிடம் காவிரி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார் ரஜினி.
காவிரி பிரச்னை எப்போது வந்தாலும் பெரும்பாலும் மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு செல்வார் ரஜினி. ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக கருத்து சொன்னால் இன்னொரு மாநிலத்தில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பும். அதனாலேயே அவர் மவுனத்தை மட்டுமே பதிலாக கொடுத்து ஜகா வாங்கி விடுகிறார்.