Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - லோகேஷ் படம் எப்போது வரும்? : ரஜினியே கொடுத்த ‛அப்டேட்'

17 செப், 2023 - 12:36 IST
எழுத்தின் அளவு:
When-will-the-Rajini-Lokesh-film-release?-:-Update-given-by-Rajini-himself

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கோயம்புத்தூரில் பேரன் காது குத்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது காரிலிருந்தே செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ‛இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளீர்கள், அப்படம் எப்படி வரும்?' என்ற கேள்விகளை செய்தியாளர்கள் முனவைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், “எனது 171வது படம் நிச்சயமாக நல்லா வரும். ஆனால் அந்த படம் முதலில் வராது. தற்போது லைக்கா தயாரிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பதால் அதன்பிறகுதான் லோகேஷ் படம் வரும்” என்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛கமல் 234' அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்: மணிரத்னம், கமல் என்ன சொன்னார்கள் தெரியுமா?‛கமல் 234' அப்டேட் கேட்ட லோகேஷ் ... இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா பார்க்கல..! இப்படி ஒரு விஷாலை என் அப்பா அம்மா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)