Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛கமல் 234' அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்: மணிரத்னம், கமல் என்ன சொன்னார்கள் தெரியுமா?

17 செப், 2023 - 12:24 IST
எழுத்தின் அளவு:
Lokesh-Kanagaraj-asks-for-Kamal-234-update:-Mani-Ratnam,-Kamal-reply

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். அதற்குள் அவரது 234வது படத்தை மணிரத்னம் இயக்கப்போவதாக அறிவிப்பும் வெளியானது. இதனால் இந்தியன்-2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணிவு படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் படம் தாமதமாகும் என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த நிலையில் ‛சைமா' விருது விழாவில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், இயக்குநர் மணிரத்னத்திடம் ‛கமல் 234' பட அப்டேட்டினை கேட்டார். அதற்கு மணிரத்னம், “தயாரிப்பாளரிடம் கேளுங்கள்” என்றார்.

பிறகு அப்படத்தை தயாரிக்க உள்ள கமல் கூறுகையில், “ஒரு நிஜமான ரசிகன் என்ன செய்ய வேண்டுமோ அதை லோகேஷ் சரியாக செய்துவிட்டார். எந்தப் பதட்டமும் இல்லாமல் நாயகன் படத்துக்கு எப்படி வேலை பார்த்தோமோ அப்படிதான் இதற்கும் பார்த்து வருகிறோம். உங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறோம். இந்த தாடிக்கூட அதற்காகதான். எதையெல்லாம் வளர்க்க முடியுமோ அதையெல்லாம் வளர்த்து வருகிறோம்” எனக் கூறினார்.
மணிரத்னம் - கமல் கடைசியாக 36 வருடங்களுக்கு முன்னதாக ‛நாயகன்' படத்தில் இணைந்திருந்தனர். அப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயிலர் படத்தில் சம்பளம் எவ்வளவு? மனம் திறந்த விநாயகன்ஜெயிலர் படத்தில் சம்பளம் எவ்வளவு? ... ரஜினி - லோகேஷ் படம் எப்போது வரும்? : ரஜினியே கொடுத்த ‛அப்டேட்' ரஜினி - லோகேஷ் படம் எப்போது வரும்? : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)