ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. டைம் டிராவல் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான விஷால் படங்களின் முதல் நாள் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இன்று, நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்திற்கான வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆபீசில் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றின் மூலம் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும், படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள், நடிகைகளுக்கும், நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, வெளிநாடுகள் ஆகிய இடங்களிலும் படம் நன்றாக ஓடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தெரிவித்தபடி, ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூபாயை விவசாயிகளுக்குத் தருவேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.