ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள படம் 'முஸ்தபா முஸ்தபா'. பிரவீன் சரவணன் இயக்கி உள்ளார். சதீஷ், சுரேஷ் ரவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா மற்றும் விஜே மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், சூப்பர்குட் உமா பத்மநாபன், வினோத் ஆகியோரும் நடித்துள்ளனர்.. எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைத்துள்ளார், விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
புதியவர்கள் உருவாக்கும் இந்த படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா என 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். சதீஷூக்கு ஜோடியாக மோனிகா சின்னகோட்லாவும், சுரேஷ் ரவிக்கு ஜோடியாக மானசா சவுத்ரியும் நடித்துள்ளனர். ஐஸ்வர்யா நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், புகழ், பாவெல் வித்தியாசமான நகைச்சுவை வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பட வெளியீடு குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.