15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் | ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் 'தக் லைப்'!! | கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு |
குணசித்ர நடிகையாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் 'ஆரோகணம்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு நெருங்கி வா முத்தமிடாதே, ஹவுஸ் ஒணர், அம்மணி படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் 'ஆர் யூ ஓகே பேபி'. வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சமுத்திரகனி கதையின் நாயகனாக நடித்துள்ளார். அபிராமி, மிஷ்கின், அனுபமா குமார், 'முருகா' அசோக், லட்சுமி ராமகிருஷ்ணன், 'ஆடுகளம்' நரேன், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி வைத்தியநாதன், கலைராணி, முல்லையரசி உள்பட நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைக்க, டி.எஸ்.கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது: சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன் நான் இயக்கிய படங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. குழந்தைகள் தத்தெடுப்பு குறித்தும், அதற்குப் பிறகான சட்டரீதியான பிரச்னைகள் குறித்தும் இப்படம் விரிவாகப் பேசுகிறது. ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய விவாதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை கண்டிப்பாக இந்த சமூகத்துக்கு சொல்லப்பட வேண்டிய ஒன்று. என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.