நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம் 'மஹாராஜா'. இதனை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. திரைப்பட பத்திரிகையாளர்கள் இணைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி சலூன் கடை நாற்காலியில் கையில் அரிவாளுடன் உட்கார்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் காவலர்கள் நின்று கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் படத்தில் விஜய்சேதுபதி சவரத் தொழிலாளியாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.