மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான ப்ரியங்கா நல்காரி, அந்த சீரியல் முடிந்த பின் ஜீ தமிழில் சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். ஆனால், சீரியல் தொடங்கி சில மாதங்களில் தனது காதலர் ராகுலை திடிரென ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதன்காரணமாக சில நாட்களிலேயே சீரியலை விட்டும் விலகினார். இதனால் ரசிகர்கள் பலரும் ப்ரியங்கா இனி நடிக்கவே வரமாட்டாரா? என வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அண்மையில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு தெலுங்கு கம்பேக் என ஹேஷ்டேக் போட்டிருந்தார். தற்போது மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள நளதமயந்தி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த சீரியலின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த பூஜையில் ப்ரியங்கா நல்காரியும் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார். இந்த தொடரில் ப்ரியங்காவுக்கு ஜோடியாக டான்ஸ் மாஸ்டர் நந்தா ஹீரோவாக நடிக்கிறார்.