லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
கடந்த 2019ல் மம்முட்டி நடிப்பில் தெலுங்கில் யாத்ரா என்கிற படம் வெளியானது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி முதல்வராக அரியணை ஏறுவதற்கு முன்பு அவர் செய்த சூறாவளி நடைப்பயணம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்படி திசைதிருப்பியது என்பதைத்தான் இந்தப் படத்தில் மையக்கருவாக அமைத்து படமாக்கி இருந்தார் இயக்குனர் மகி ராகவ்.
அதை தொடர்ந்து அந்த வருடமே நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வகையில் அவரது வெற்றியில் யாத்ரா படத்திற்கும் ஒரு மிகப்பெரிய பங்கு இருந்தது. இந்த நிலையில் தற்போது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை இயக்கிய மகிராகவ். இந்த படம் முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டியை மையப்படுத்தி உருவாக எண்ணி உள்ளார். அவரது தந்தை கதாபாத்திரத்தில் யாத்ரா படத்தில் மம்முட்டி நடித்தது போல, ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை இயக்குனர் அணுகியுள்ளார்.
ஆனால் துல்கர் சல்மான் இந்த படத்தில் சில காரணங்களை கூறி நடிக்க மறுத்துவிட்டார். குறிப்பாக தெலுங்கில் தற்போது துல்கர் சல்மானுக்கு ரசிகர் வட்டம் பெருகி வருகிறது, அனைத்து தரப்பிலும் அவரது ரசிகர்கள் இருப்பதால் அரசியல் சார்ந்த படத்தில் நடித்து தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க வேண்டாம் என்பதாலேயே இந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார் என சொல்லப்படுகிறது.