வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
இந்தியத் திரையுலகத்தில் இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றவர் ராஜமவுலி. அவருடைய படங்களைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுவதைப் போல அவரும் மற்ற படங்களைப் பார்த்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருப்பவர்.
நேற்று, 'பேக் டூ பேக்' இரண்டு படங்களைப் பார்த்து அது பற்றிய தன்னுடைய பாராட்டுக்களைப் பதிவிட்டுள்ளார். “நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டு படங்களைப் பார்த்தேன். ஸ்வீட்டி எப்போதும் போல அழகாகவும், பொலிவாகவும் இருக்கிறார். நவீன் பொலிஷெட்டி நிறைய சிரிப்பையும், வேடிக்கையையும் வழங்கினார். மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி குழுவிற்கு வாழ்த்துகள். இவ்வளவு உணர்ச்சிகரமான விஷயத்தை மிகவும் வேடிக்கையாகக் கையாண்ட உங்களுக்குப் பாராட்டுக்கள், மகேஷ்,” என படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
அடுத்து 'ஜவான்' குழுவினரைப் பாராட்டி, “பாக்ஸ் ஆபீஸின் பாட்ஷா' ஷாரூக் என்பதற்கு இதுவே காரணம்.. இந்த பூமியை உலுக்கிய ஒரு ஓபனிங். வடக்கிலும் வெற்றிப் பயணத்தைத் தொடர இயக்குனர் அட்லீக்கு வாழ்த்துகள், அபார வெற்றி பெற்றதற்காக 'ஜவான்' குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜமவுலியின் பாராட்டால் இரண்டு படங்களுக்கும் இன்னும் கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.