'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
தமிழ் சினிமாவில் சில முக்கிய படங்களின் வெளியீட்டுத் தேதிகளை கடைசி நிமிடத்தில் திடீர் திடீரென மாற்றி வருகிறார்கள். வரும் வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்த 'சந்திரமுகி 2' படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28ம் தேதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்கள். செப்டம்பர் 28ம் தேதியன்று “இறைவன், ரத்தம், பார்க்கிங், சித்தா,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தப் போட்டியில் தற்போது 'சந்திரமுகி 2' படமும் இணைகிறது.
இந்நிலையில் பெரிய கம்பெனிகளின் படங்களை இப்படி திடீரென மாற்றுவது குறித்து 'ரத்தம்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். “தமிழ் சினிமாவின் மற்றுமொரு வேதனை என்னவென்றால், பெரிய கம்பெனிகளில் இருந்து வரும் பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதியை அப்படியே மாற்றுவது, தள்ளி வைக்கப்பட்ட வாரத்தில் வெளியாகும் படங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருக்கிறார்கள்.
செப்டம்பர் 28ம் தேதி ஐந்து புதிய படங்கள், மற்ற மொழிப் படங்கள் என ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுப்பார்கள். பெரிய படங்களின் ரிலீஸ் தேதியை கடைபிடிக்கும் ஒழுக்கம் எங்கே ?. ரசிகர்களைப் பெற சவால்களை சந்திக்கும், சிறிய படங்கள் மற்றும் நடுத்தரத் திரைப்படங்கள் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்வது பரவாயில்லை. ஆனால், பெரிய படங்கள் இப்படி செய்வது, மிகவும் ஏமாற்றமளிக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தில் படங்களின் வெளியீட்டில் எந்த ஒரு வரைமுறையையும் தயாரிப்பாளர்கள் கடைபிடிப்பதில்லை. ஒரு காலத்தில் தயாரிப்பாளர் சங்கங்களில் இது பற்றி பேசி ஒரு முடிவெடுப்பார்கள். ஆனால், இப்போது இரண்டு தயாரிப்பாளர் சங்கங்கள் இருந்தும் பட வெளியீடுகள் தாறுமாறாக நடந்து வருகின்றன. இந்த வாரத்தில் கூட 6 நேரடி தமிழ்ப் படங்கள், 2 டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளன. பட வெளியீட்டில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் முறையை யார் கொண்டு வரப் போகிறார்கள் ?.