எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் படங்கள் புறக்கணிக்பபட்டிருப்பதாக கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இத தொடர்பாக பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக சூர்யா தயாரித்து, நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு விருதுகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இயக்குனர் வெற்றி மாறனிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது: தேசிய விருதுகளை பொறுத்தவரை அதில் எனக்கு தனிப்பட்ட கருத்து உள்ளது. ஒரு படத்தை குறிப்பிட்ட விருதுக்காக அனுப்பும் போது, 'அந்த தேர்வுக்குழுவின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன்' என்ற ஒப்புதலோடு தான் தேர்வுக்கு அனுப்புகிறோம். எனவே விருது கிடைப்பதும், கிடைக்காததும் அந்த தேர்வுக்குழுவின் முடிவு. அதே போல், ஒரு தேர்வுக்குழுவின் முடிவு எந்த படத்தின் தரத்தையும், சமூக பங்களிப்பையும் தீர்மானிப்பதில்லை.
குறிப்பாக 'ஜெய்பீம்' படம் வந்த பிறகு குறிப்பிட்ட அந்த சமூகத்தினரின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த படத்தை தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது. விருது கிடைத்திருந்தால் அது அந்த படக்குழுவிற்கு கூடுதல் சிறப்பைக் கொடுத்திருக்கும். எனவே ஒரு படத்தின் தரத்தை தேர்வுக்குழு முடிவு தீர்மானிக்க முடியாது என்பது எனது கருத்து. அதே போல தேர்வு குழுவின் முடிவிற்கு கட்டுப்படுவதாக கூறி படத்தை அனுப்பிவிட்டு அதன்பிறகு விருது குறித்து விமர்சிப்பதிலும் உடன்பாடில்லை. தேர்வு குழுவில் நம்பிக்கை இல்லாவிட்டால் படங்களை விருதுக்கு அனுப்ப கூடாது.
இவ்வாறு வெற்றிமாறன் கூறினார்.