ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ள இந்த படம் ஹிந்தியை தாண்டி அடுத்தபடியாக தமிழில் மிகுந்த கவனம் செலுத்தி புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. காரணம் அட்லீயையும் தாண்டி இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் வில்லனாக விஜய்சேதுபதியும் நடித்திருப்பது தான். கூடவே அனிருத்தும் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைந்திருப்பதால் ஹிந்தியை தாண்டி ஒரு தமிழ் படமாகவே இது புரமோட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜய்சேதுபதி பேசும்போது, “நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒரு பெண்ணை விரும்பினேன். எல்லா பெண்களுக்கும் 96 ஜானு போல இப்படி ஒரு கதை இருக்கும். ஆனால் அந்த பெண் ஷாரூக்கான் மீது மிகப்பெரிய காதலில் இருந்தார். அந்த சமயத்தில் என் காதலுக்கு வில்லனாக இருந்தவர் ஷாரூக்கான் கான். அதற்காக அவரை பழிவாங்க நினைத்திருந்தேன். இந்த ஜவான் படத்தின் மூலம் அது நிறைவேறி உள்ளது'' என்று கூறினார்.