'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக 1994ல் வெளிவந்த 'காதலன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நக்மா. அதற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட ஹிந்திப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்துவிட்டார்.
'காதலன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் ஜோடியகா நடித்த 'பாட்ஷா' படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்தார். பின்னர் போஜ்புரி மொழியில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். 2008ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார் நக்மா.
48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவரது தங்கைகளான ஜோதிகா, ரோஷினி ஆகியோர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டனர். இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் நக்மா.
“எனக்குத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமில்லை. வேறு வார்த்தைகளில் கூறு வேண்டுமென்றால் எனக்கும் ஒரு துணை, குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாக வேண்டும். என் திருமணம் விரைவில் நடக்குமா என்று பார்ப்போம். திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல,” என உணர்வுபூர்வமாய் பேசியுள்ளார்.
நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, போஜ்புரி நடிகர் ரவி கிஷன் ஆகியோருடன் காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நக்மா.