'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

டிஜி பிலிம் கம்பெனி, மேக்னா புரொடக்ஷன் இணைந்து தயாரிக்கும் படம் 'அலங்கு'. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் இயக்குகிறார். குணாநிதி, செம்பன் வினோத், காளிவெங்கட், சரத் அப்பானி, சவுந்தரராஜா, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி, மாஸ்டர் அஜய், இதயகுமார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். பாண்டிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். அஜீஸ் இசை அமைக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் எஸ்.பி.சக்திவேல் கூறியதாவது: தமிழக, கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும், தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் திரைப்படத்தின் மையம், அதன் பின்னணி என்ன என்பதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை வடிவமைக்கப்பட்டுள்ளது.
'அலங்கு' என்பது தமிழ் குடியின் முதல் நாட்டு நாய் இனத்தை சார்ந்ததாகும். அத்துடன் ராஜராஜ சோழனின் படையில் போர்நாயாக இருந்ததாக ஆய்வாளர்களும் கூறுகின்றனர். ஆனால் கால போக்கில் அந்த இனம் அழிந்து போனதாகவும் மருவி வேறு இன பெயர்களில் வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன. இக்கதையின் அடிப்படை தன்மைக்கும் , நினைவூட்டலுக்கும் இந்த பெயர் மிகவும் பொருந்தி இருப்பதால் இத்திரைப்படத்துக்கு 'அலங்கு' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க வனம் , வனம் சார்ந்த மக்கள் என படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு , கேரள மாநிலம் இடுக்கி, அட்டப்பாடி அதை தொடர்ந்து தேனி, கம்பம் , கோவை மாவட்டம் ஆனைகட்டி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக 52 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். முற்றிலும் மாறுபட்ட ஒரு திரை அனுபவத்தை இத்திரைப்படம் தரும். என்கிறார் சக்திவேல்.




