கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
தமிழில் 'ஆடுகளம்' படம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. அதன் பிறகு சில தமிழ்ப் படங்களில்தான் நடித்தார். அதே சமயம் ஹிந்தியில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார். தற்போது சில ஹிந்திப் படங்களில் நடித்து வரும் டாப்ஸி, இன்ஸ்டாகிராம் தளத்தில் கிளாமர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தொடையழகு தெரியும் விதத்தில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளன. பொதுவாக வாய்ப்பில்லாத நடிகைகள்தான் இப்படி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், கைவசம் எப்போதுமே படங்களை வைத்திருக்கும் டாப்ஸி இப்படியான புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.
தமிழில் கடைசியாக 2021ல் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'அனபெல் சேதுபதி' படத்தில் நடித்தார் டாப்ஸி. அதன்பின் எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை.