அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? |
தமிழில் 'ஆடுகளம்' படம் அறிமுகமான டாப்ஸி, தெலுங்கு, ஹிந்தியிலும் பிரபலமான நடிகை. சமீபத்தில் வெளிவந்த 'டங்கி' படத்தில் ஷாரூக் ஜோடியாகவும் நடித்திருந்தார். அவரது நீண்ட நாள் நண்பரான மத்தியாஸ் போ-வை இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன.
அது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “இப்போது வதந்திகளை ஆரம்பிப்பது அர்த்தமற்றது. இப்போது இதை யூகமாக வெளியிடும் நீங்கள், பத்து வருடங்களுக்கு முன்பு இந்த மனிதரை 'டேட்டிங்' செய்ய ஆரம்பித்த போதே வெளியிட்டிருக்க வேண்டும். நான் எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவராக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், எதற்காக இவ்வளவு ஆர்வம் என்பது எனக்குப் புரியவில்லை.
நீங்கள் இதை இப்படியே விட்டால், சரியான நேரத்தில் செய்தியை பகிர்வேன். ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் செய்வேன். நான் எதையும் தவறாகவோ, சட்ட விரோதமாகவே செய்யவில்லை. நான் சிங்கிள், நான் திருமணம் செய்து கொள்வேன் என அவர்கள் எதிர்பார்க்கவில்லையா அல்லது வேறு ஏதாவதா?. நான் எனது உறவுகளைப் பொறுத்தவரையில் நேர்மையாக இருக்கிறேன், நான் எதையும் மறைக்கவில்லை. எனவே, அது நடக்கும் போது உங்களுக்கும் தெரிய வரும். மக்கள் எனது நடிப்பை நேசிக்கிறார்கள், ஆனால், எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவரிக்க வேண்டும் என நான் விரும்பவில்லை,” என்று பேசியிருக்கிறார்.