போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

2024ம் ஆண்டில் தென்னிந்தியத் திரையுலகத்தைப் பொறுத்தவரை மற்ற மொழிப் படங்களை விடவும், மலையாளத்தில் சில சிறந்த படங்களும், சில பிரமாதமான வசூல் படங்களும் வெளிவந்துள்ளன.
தமிழகம் முழுவதும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' என ஒரு பரபரப்பு போய்க் கொண்டிருக்க, மற்றொரு மலையாளப் படமான 'பிரேமலு' படமும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
கிரிஷ் இயக்கத்தில், நஸ்லன் கே கபூர், மாத்யூ தாமஸ், மமிதா பைஜு, ஷியாம் மோகன் மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்தப் படம் கடந்த மாதம் 9ம் தேதி வெளியானது. ஒரு மாதத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இந்த 2024ம் ஆண்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்த இரண்டாவது மலையாளப் படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்திற்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்து வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஏற்கெனவே 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
மலையாளத் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் ஒரே ஆண்டில் இரண்டு 100 கோடி படங்கள் வந்துள்ளது இதுவே முதல் முறை.
இதற்கு முன்பு “புலிமுருகன் (2016 ரிலீஸ்), லூசிபர் (2019 ரிலீஸ்), 2018 (2023 ரிலீஸ்) ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன.