நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹிருதயபூர்வம். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சங்கீத் பிரதாப் நடித்துள்ளார். இவர் பிரேமலு படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்து தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். ஏற்கனவே மோகன்லாலுடன் தொடரும் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த ஹிருதயபூர்வம் படத்தில் மோகன்லாலுடன் படம் முழுவதும் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சங்கீத் பிரதாப்.
படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தில் மோகன்லால் உடனான அனுபவங்கள் குறித்து சங்கீத் பிரதாப் கூறும்போது, “குமுளியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எனக்கு ஒரு நாள் தாங்க முடியாத காய்ச்சல் வந்தது. இயக்குனர் சத்யன் அந்திக்காடு, மோகன்லாலுக்கு ஒதுக்கப்பட்ட அந்த அறையிலேயே என்னை ஓய்வெடுக்கும்படி கூறினார். அந்த ஊரில் இருந்த டாக்டர் வரவழைக்கப்பட்டு எனக்கு ஊசி போட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்தார். அப்போது அங்கே வந்த மோகன்லால் டாக்டரிடம் என் உடல் நிலை குறித்து கவனமாக கேட்டறிந்தார்.
அதன்பிறகு என் அருகில் நின்று என் தலையை சில வினாடிகள் கோதிவிட்டு நன்றாக ஓய்வெடு என்று கூறினார். அவரது அன்பை கண்டு என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அதுமட்டுமல்ல அன்றைய தினம் நானும் அவரும் நடிக்கும் காட்சிகள் தான் எடுக்கப்பட இருந்தன. அதனால் அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்து விடுமாறும் அறிவித்துவிட்டார் மோகன்லால். அதன்பிறகு எனக்கு காய்ச்சல் குறைந்ததும், மறுநாள் தான் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. என்னைப் போன்று வளர்ந்து வரும் ஒரு சிறிய நடிகருக்காக மோகன்லால் காட்டிய பரிவு என் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்று கூறியுள்ளார்.