தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது 550 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும், நேற்றும், நேற்று முன்தினமும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்திற்கு வசூல் சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். பொதுவாக வெளிநாடுகளில் ஒரு தமிழ்ப் படம் அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் வரை ஓடும். ஆனால் 'ஜெயிலர்' படத்தைப் பொறுத்தவரையில் மூன்றாவது வாரத்திலும் ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் வார இறுதி வரையிலும் இப்படம் தியேட்டர்களில் ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இதுவரை 185 கோடி வசூலை இப்படம் கடந்துள்ளது என்கிறார்கள். வரும் வாரத்திலும் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்தால் 200 கோடி வசூலைக் கடக்க வாய்ப்புள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள். வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் '2.0' படத்தின் வசூலை 'ஜெயிலர்' வசூல் கடந்துவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.