ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான '96' என்ற படத்தில், திரிஷாவின் இளம் வயது கேரக்டரான ஜானுவாக நடித்தவர் கவுரி கிஷன். பிறகு 'மாஸ்டர்', 'கர்ணன்' ஆகிய படங்களில் சிறிய அதே நேரத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். ஆனாலும் தமிழில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கு, மலையாளத்தில் நடித்தார்.
தமிழில் அவர் முழுமையான ஹீரோயினாக நடித்துள்ள படம் 'அடியே'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். நாளை இந்த படம் வெளிவருகிறது. கவுரி கிஷன் ஒரு ஹீரோயினாக தமிழில் வெற்றி பெறுவாரா என்பது நாளை தெரிந்து விடும்.
படம் குறித்து கவுரி கிஷன் கூறுகையில், 'ஜானுவாக நடித்த பின்பு, அதுபோன்று இது எனது கேரியரில் முக்கியமான படம் இது. ஜானு கேரக்டர் அனைவருடைய மனதிலும் ஆழமாகப் பதிந்தது போல், இப்படத்தின் கேரக்டரும் பதியும் என்று நம்புகிறேன். 'அடியே' படம், கண்டிப்பாக என்னை சரியான இடத்தில் கொண்டு சேர்க்கும்" என்றார்.




