23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடியே'. இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக கவுரி கிஷன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மல்டிவெர்ஸ் என்ற எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.